குளோபல் தமிழ் செய்தியாளர்
சிரியாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட வேண்டும் என லெபனான் ஜனாதிபதி மிச்சேல் ஓன் ( Michel Aoun ) கோரிக்கை விடுத்துள்ளார். சிரிய அரசாங்கம் அகதிகளுக்கு பாதுகாப்பான வலயங்களை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் இவ்வாறான பாதுகாப்பு வலயங்களை அறிவித்து அகதிகளை பாதுகாக்க உலக நாடுகள், சிரியாவுடன் இணைந்து செயற்பட வேண்டுமென கோரியுள்ளார்.
மேலும் சிரிய யுத்தம் காரணமாக கடந்த 2011ம் ஆண்டு முதல் இதுவரையில் ஒரு மில்லியன் சிரிய மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர் அரசியல் தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.