அமெரிக்க வர்த்தகத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 7 முஸ்லிம் நாடுகள் மீது விதித்த பயணத்தடை உத்தரவு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து அப்பிள், முகப்புத்தகம் மற்றும் கூகுள் உள்பட அமெரிக்காவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக வழக்கு ஒன்றை தொடுத்துள்ளன.
சன் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கையெழுத்திட்டு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.
இந்தத் தடை ஆணையால் வெளிநாடுகளில் தங்களுடைய சேவையை விரிவுப்படுத்துவதற்கு தேவையான திறமையானவர்களை ஈர்க்க கடினமாக இருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.