இந்து மற்றும் இஸ்லாமிய மக்களது மத ரீதியிலான முக்கியத்துவமிக்க நாட்களான சிவராத்திரி, தைப் பொங்கல், தீபாவளி, மீலாதுன் நபி தினம் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் போன்ற தினங்களிலும் நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளை மூடுவதற்கு கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்து, அதனை செயற்படுத்துமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ் விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்அவர் எமது நாட்டைப் பொறுத்த வரையில் 12 பௌர்ணமி தினங்களிலும், வெசாக் பௌர்ணமி தினத்துக்கு மறு தினமும் என 13 நாட்களிலும், தேசிய சுதந்திர தினம், உலக மது ஒழிப்புத் தினம், தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய தினம், தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினம், ஈதுல் பித்ர் – றமழான் பெருநாள் தினம், நத்தார் தினம் ஆகிய 6 நாட்களிலுமாக வருடத்தில் 19 நாட்கள் மதுபான நிலையங்கள் மூடப்படுகின்றன.
எமது நாட்டைப் பொறுத்த வரையில் 12 பௌர்ணமி தினங்களிலும், வெசாக் பௌர்ணமி தினத்துக்கு மறு தினமும் என 13 நாட்களிலும், தேசிய சுதந்திர தினம், உலக மது ஒழிப்புத் தினம், தமிழ் – உள்ளிட்ட 19 நாட்கள் மதுபான நிலையங்கள் மூடப்படுகின்றன.
அதேபோன்று இந்து மற்றும் இஸ்லாமிய மக்களது மத ரீதியிலான முக்கியத்துவமிக்க நாட்களிலும் கூடிய அவதானத்தைச் செலுத்தி, அந்த மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையிலும மதுபான சாலைகளை நாடளாவிய ரீதியில் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து உதவுமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.