ரஸ்ய வீராங்கனையான மரியா சவினோவா (Mariya Savinova ) பர்னோசோவா என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதன் காரணமாக லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 800 மீட்டர் ஓட்டத்தில் பெற்றிருந்த தங்க பதக்கம் மீறப் பெறப்பட்டுள்ளது.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து அவர் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இன்றையதினம் தீர்;ப்பினை வழங்கிய சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் மரியா சவினோவா , பர்னோசோவா ஊக்கமருந்து பயன்படுத்தியதை உறுதிப்படுத்தியது.
2010-ம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற ஐரோப்பியன் சம்பியன் தொடரில் இருந்து மொஸ்கோவில் நடைபெற்ற 2013-ம் ஆண்டு உலக சம்பியன் வரை, அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியமை அடங்கும். இதனால் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரும் அடங்கும் என்பதால், அவர் பெற்ற தங்க பதக்கம் மீறப் பெறப்பட்டுள்ளது.
இவரது தடைக்காலம் 2015-ம் ஆண்டு ஓகஸ்ட் 24ம்திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.