குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக செய்யப்படக்கூடிய அரசியல் சாசன திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தயார் என அண்மையில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல ஐக்கிய தேசியக் கட்சி மட்டும் நாட்டை ஆட்சி செய்வதாகவே கருதி செயற்பட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடிப்படை கொள்கைகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்காது எனவு;ம அவர் சுட்டிக்காட்டியுள்ளார்