Home இலங்கைஅரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – பந்துல குணவர்தன

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – பந்துல குணவர்தன

by admin

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக லொத்தர் சீட்டு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினால் இன்றைய தினம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

லொத்தர் சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் பாதிக்கப்படும் வகையில் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More