இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் டெங்கு தீவிரம் – மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது. 2017ம் வருடத்தின் முதல் 43 நாட்களில்இ கிளிநொச்சியின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து 126 நோயாளர்கள் டெங்குக்காய்ச்சல் காரணமாகச் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களுள் அனேகர் வெளிமாவட்டங்களில் பணி கல்வி நடவடிக்கைகள் மற்றும் பிற தேவைகளுக்காகச் சென்று தங்கியிருந்தவேளையில் நோய்த்தொற்றுக்கு ஆளாகிய நிலையில் எமது மாவட்டத்திற்குத் திரும்பியிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கண்ணகைபுரம், கிராஞ்சி, கல்மடுநகர், புன்னைநீராவி, தருமபுரம், அம்பாள்குளம், பாரதிபுரம், கோணாவில், மலையாளபுரம், பிரமந்தனாறு, தருமபுரம், ஆனைவிழுந்தான், கிருஸ்ணபுரம், இராமநாதபுரம், சாந்தபுரம், வேரவில், அம்பாள்நகர், கணேசபுரம், கண்டாவளைஇ கல்லாறு, மாவடியம்மன், மாயவனூர், நாச்சிக்குடா, நல்லூர், பரமன்கிராய், பெரியகுளம், பெரியபரந்தன், செல்வாநகர், ஸ்கந்தபுரம், உருத்திரபுரம் கிழக்கு, உதயநகர் மேற்கு, வட்டக்கச்சி ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் இருந்தே ஒன்றிற்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே உயிர்க்கொல்லி டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாவட்டம் முழுவதும் டெங்குகுடம்பிகள் மற்றும் டெங்கு நுளம்புகள் வாழக்கூடிய இடங்களை இனங்கண்டு அழிக்கும் நோக்குடன் சிரமதான நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளது ஒழுங்கமைப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல்இ விழிப்புணர்வு ஏற்படுத்துதல்இ பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை வழங்கி உங்களதும் உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்களதும் உயிர்களைக் காக்க உதவிடுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் வேண்டுகின்றார் .

டெங்குநோய் தடுப்பு செயற்பாடுகள் – கிளிநொச்சி மாவட்டம்

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு

திகதி    இடம்    செயற்பாடுகள்
1.    06.02.2017    மலையாளபுரம்    டெங்கு பரவுவதற்கு ஏதுவாக உள்ள பகுதிகளை சிரமதான அடிப்படையில் துப்புரவு செய்தல்இ சேகரிப்படும் கழிவுகளை பிரதேச சபை உழவு இயந்திரங்களின் மூலம் அகற்றுதல்
2.    09.02.2017    சிவநகர்இ செல்வாநகர்
3.    10.02.2017    விவேகானந்தநகர்
4.    11.02.2017    மாயவனூர்
5.    14.02.2017    ஆனந்தபுரம்
6.    16.02.2017    உதயநகர் கிழக்கு
7.    17.02.2017    திருநகர் வடக்கு
8.    20.02.2017    அம்பாள்குளம்இ கனகபுரம்
9.    27.02.2017    கணேசபுரம்இ பெரியபரந்தன்
10.    02.03.2017    மருதநகர்இ பன்னங்கண்டி

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு

திகதி    இடம்    செயற்பாடுகள்
1.    07.02.2017    பொன்னாவெளி    டெங்கு பரவுவதற்கு ஏதுவாக உள்ள பகுதிகளை சிரமதான அடிப்படையில்
துப்புரவு செய்தல்இ சகல வீடுகளிலும் உள்ள
கழிவுப் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல்
2.    10.02.2017    நாச்சிக்குடா
3.    13.02.2017    பள்ளிக்குடா, நல்லூர், மட்டுவில்நாடு மேற்கு, கொல்லக்குறிச்சி
4.    14.02.2017    ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு, பல்லவராயன்கட்டு
5.    15.02.2017    கிராஞ்சி
6.    16.02.2017    முழங்காவில், கரியாலை நாகபடுவான், இரணைதீவு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap