198
இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் நேற்று நள்ளிரவு முதல் நிர்ணயம் செய்யப்பட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட நாடு அரிசி கிலோ ஒன்று 70 ரூபாவாகவும், உள்நாட்டு நாடு அரிசி கிலோ ஒன்று 80 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி கிலோ ஒன்று 80 ரூபாவாகவும், உள்நாட்டு சம்பா அரிசி கிலோ ஒன்று 90 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Spread the love