170
துருக்கியில் முன்னாள் நீதவான் உள்ளிட்ட சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் நீதவான் Dursun Ali Gündoğdu மற்றும் வழக்குரைஞர்களான Adnan Çimen மற்றும் Sadrettin Sarıkaya ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்தான்புல்லில் வைத்து நேற்றைய தினம் இவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் இராணுவ சதிப்புரட்சி ஊடாக ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சித்த Gülen movement என்ற அமைப்புடன் இந்த அதிகாரிகள் தொடர்பு பேணியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love