153
காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜப்பானுக்கு பயணம் செய்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள 22ம் ஆசிய பசுபிக் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, இன்று அதிகாலை காவல்துறை மா அதிபர் ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாடு இன்று முதல் 24ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் காலப் பகுதி வரையில் பதில் காவல்துறை மா அதிபராக சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love