சென்னை சிறைக்கு தன்னை மாற்றக்கோரி, தமிழகம் மற்றும் கர்நாடக சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுத சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன்னை சென்னை சிறைக்கு மாற்றக்கோரி தமிழக, கர்நாடக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத முடிவு எடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக சசிகலா தனது சட்டத்தரணிகளிடம் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு தமிழகத்தின் வழக்கு என்பதால், இருமாநில சிறைத்துறை அதிகாரிகள் பரஸ்பரமாக ஒப்புக்கொண்டால் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது எனவும், இதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை இல்லை என்றும் பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளை யாராவது உச்ச நீதிமன்றில்; மனு போட்டு, சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றக்கூடாது என்று கோரினால், அப்போது உச்ச நீதிமன்றம் இதில் தலையிடும் எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.