இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பற்றுறையில் முன்னேற்றங் காண வேண்டுமாயின் இத்துறைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்த வேண்டுமென இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjorn Gaustadsaether தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடக பிரிவுடனாhன விசேட ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்றும் பொருட்டு இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோர்வே நிறுவனங்களின் கப்பல்கள் உலக அங்கீகாரம் பெற்றவை எனவும் இக்கப்பல்களில் பல்வேறு நாட்டினரும் பணியாற்றுவதாகவும் இலங்கையர்களும் இக்கப்பல்களில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ளலாம எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்வார்களாயின் முன்னேற்றம் காண்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.