தேசிய கொள்கைகள் அற்ற ஒரே நாடு இலங்கையாகும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் பெல்லன்வில விமலரதன தேரர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தேசிய கொள்கையும் அற்ற நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்டை நாடான இந்தியாவில் தேசிய கொள்கைகள் முறையாக அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கையில் இவ்வாறான ஓர் கொள்கை அற்ற காரணத்தினால் ஆட்சி மாறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் கொள்கைகள் மாற்றமடைவதாகத் தெரிவித்துள்ளார்.
எல்லா சந்தர்ப்பங்களுக்குமான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து துறைகளினதும் கொள்கைகள் மீளமைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய முழுச் சமூகமும் வழிநடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளதோடு, நல்லாட்சி என்றால் என்ன என்பது குறித்துக் கூட பொதுமக்களுக்கு போதிளவு தெளிவுகிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.