தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடகவியாளர் கீத் நொயார் தாக்குதல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை, ரிவிர பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் மற்றும் தி நேசன் பத்திரிகையின் கீத் நொயர் மீதான தாக்குதல் என்பன ஒரே இடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டவை என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தாக்குதல்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.