கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோவுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில் பல முக்கிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாப்பட்டதாக ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் தலைமையில் கிழக்கு மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தசந்திப்பின் போது பட்டதாரிகளுக்கு நியாயமானதாகவும் நிரந்தரமானதுமானதுமான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டதாகவும் தற்போது பட்டதாரிகளை உள்ளீர்த்தல் பொறிமுறையில் 40 வயதாகவுள்ள வயதெல்லையை 45 வயதுவரை உயர்த்துதல் தொடர்பான தீர்மானம் ஆளுனரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு எதிர்வரும் ஏப்ரலுக்குள் பட்டதாரிகளை உள்ளீர்த்துக் கொள்வதற்கான செயற்பாட்டை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஆளுனரிடம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி வருடாவருடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பட்டதாரிகளை உள்வாங்குவாற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் அவசியம் எனவும் விரைவில் இது தொடர்பான பிரேரணையொன்றை மாகாண சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் இதனூடாக பட்டதாரிகளுக்கு நிரந்தர விடிவு காலத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தவுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஆளுனரிம் எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.