வடக்கு மாகாணத்தின் கல்வியில் இன்று அரசியல் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகின்றது, கல்வியலாளர்கள் அனைவரும் இது விடயத்தல் மௌனமாக உள்ளனர் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேஸ்வரன் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்
கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளராக இருந்து கடந்த வாரம் ஓய்வுப்பெற்ற க.முருகவேல் அவர்களின் மணிவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது
வடக்கின் கல்வித்துறையில் நியமனங்கள் தொடக்கம் அனைத்து விடயங்களையம் அரசியல்வாதிகளே செய்து வருகின்றனர் ஒட்டுமொத்த்தில் வடக்கின் கல்வி அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டது. இன்று வடக்கு மாகணத்தின் கல்வி வேறு விதமான நெருக்கடிக்களை சுமக்கின்றது என்றுமில்லாதவாறு கல்வியில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துச் செல்கின்றன. ஆதிகாரிகள் அதிபர்கள் சுயமாக செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது, பக்கம் சார்ந்த அரசியலால் பலரும் பாதிப்புக்குள்ளாகும் நிலைமை அதிகிரத்துள்ளது.
கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. கல்வி நிர்வாக சேவையை சேர்ந்த பலர் கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு கல்விப் பணிப்பாளராக வர மறுக்கின்றார்கள் ஏன்? இங்கு ஒரு நெருக்கடியான சூழல் காணப்படுகிறது. ஆரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கெஞ்சி மன்றாடும் அளவுக்கு கிளிநொச்சி கல்வி வலயத்தில் பல்வேறு நெருக்கடிகள் இருக்கின்றன.
இனிவரும் காலங்களிலாவது கிளிநொச்சியின் கல்வியை வளர்தெடுப்பற்கு ஆசிரியர்கள் அதிபர்கள் அதிகரிகள் என்ற மட்டத்தோடு இருப்பதற்கு வழித்தேடிக்கொள்ள வேண்டும். ஏன் இதைநான் வலியுறுத்துகிறேன் என்றால் இங்கு ஒரு அதிபரை நியமிப்பதற்கும் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது, ஒரு ஆசிரியரை நியமிப்பதற்கும் அரசியல் வாதிகளின் தலையீடு இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் அந்த அரசியல் வாதிகளின் தலையீடுகளுக்கு எதிராக பேராட முடியாத நிலையில் இருக்கின்றோம் ஏன்னென்றால் நாங்கள்தான் வீட்டுக்கு புள்ளடி போட்டு அவர்களை தெரிவு செய்துவிட்டோம் தேர்தெடுத்தோம் இது ஒரு வெட்ககேடன விடயம். இந்த விடயத்தை நான் அதில் சொல்லாது விட்டால் முருகவேல் அவர்கள் வளர்த்தெடுத்த, அவர் கட்டிகாத்த கிளிநொச்சியின் கல்வி இன்னும் சீர்கெட்டுபோய்விடும் ஆகவே நாங்கள் எல்லோரும் விழிப்பாக இருக்க வேண்டும்
பல்வேறு நெருக்கடியான காலங்களில் ஆசிரியராக அதிபராக உதவிக் கல்விப் பணிப்பாளராக வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியவர் எப்பொழுதும் சிரித்த முகத்தோடு இருப்பவர், ஒரு நல்ல மனிதர் முருகவேல் அவர்கள். எனவே இவர் போன்று நல்ல மனிதர்கள் இனியும் உருவாக வேண்டும், கிளிநொச்சி கல்வி வளர்த்தெடுக்கப்படல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.