கோப்பாப்புலவு நில மீட்புப் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடக்கோரியும் மக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து உரும்பிராய் பங்குத் திருச்சபை மக்கள் ஒன்று உரும்பிராய் பலாலி வீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இன்று 26.02.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் ‘அரசே பூர்வீக நிலத்தில் குடியேறி எம்மை வாழ விடு’
எங்கள் சொந்த மண்ணில் விளையாட எங்களுக்கு ஆசை இருக்காதா–? எங்கள் கோரிக்கைகளுக்கு முடிவே வராதா? இன்னும் எத்தனை காலம் தான் நாங்கள் அகதியாக வாழ்வது-! ‘இந்தமண் எங்களின் சொந்த மண் இந்த மண்ணில் எங்களை வாழ விடுங்கள்’ ‘எமது நிலங்ளை வெ ளியேறு’ சொந்தக் காணியில் குடியேற அனுமதியுங்கள் , ‘நல்லாட்சி அரசில் நல்லதைச் செய்யுங்கள்’ காணாமல் ஆக்கப்பட்டோரின் முடிவு என்ன–? காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? அவர்களை மீட்டுத்தாருங்கள் என்றும் கோஷங்களை எழுப்பியும் பதாதைகளைத் தாங்கியவாறும் கோப்பாப்புலவு நில மீட்ப்புப் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடக்கோரியும் மக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து உரும்பிராய் பங்குத் திருச்சபை மக்கள் ஒன்று உரும்பிராய் பலாலி வீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.