193
கிளிநொச்சியில் கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்டு இரவு பகலாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டுடனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை 26-02-2017 காலை கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நல்லாட்சியா நாடக ஆட்சியா? , எமது உறவுகள் எங்கே , என்ற பல பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் கிளிநொச்சி திரேசா ஆலய முன்றலில் இருந்து ஊர்வலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கி இருந்தனர்.
Spread the love