Home இலங்கைஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை – மனோ கணேசன்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை – மனோ கணேசன்

by admin


உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள், புதிய முறையில் தேர்தல் நடத்துவதனை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழைய முறையில் தேர்தல் நடத்துமாறு கோருவதன் உள்நோக்கம் தேர்தலை பிற்போடச் செய்வதல்ல என  சுட்டிக்காட்டியுள்ள அவர் தேர்தல்கள் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயார் எனவும், எந்த தரப்பிற்கும் பாதிப்பு அற்ற வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More