185
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த பல்கலைகழக மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். யாழ்ப்பாணம் நயினாதீவை சொந்த இடமாக கொண்டவரும், தற்போது கொழும்பில் வசித்து வரும் , ரஜரட்ட பல்கலைகழக மாணவனான தவகுலரெத்திணம் ரகுராம் (வயது 24) எனும் மாணவனே உயிரிழந்து உள்ளார்.
சக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை வீதி வளைவொன்றில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கபப்டுகின்றது.
குறித்த விபத்து சம்பவத்தில் குறித்த மாணவன் உயிரிழக்க மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Spread the love