கேப்பாபுலவு பிலகுடியிருப்பு மக்களின் 10 குடும்பங்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கபடுகின்றது. கேப்பாபுலவு பிலகுடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் காணிகள் கையளிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டு 40 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.ஏனைய காணிகளை சுற்றி விமான படையினர் புதிதாக முட்கம்பி வேலிகளை அமைத்து வருகின்றனர்.
பிலகுடியிருப்பில் 54 குடும்பங்களின் காணிகளில் இன்றைய தினம் 37 குடும்பங்களின் காணியே முற்றாக விடுவிக்கப்பட்டு உள்ளது. 7 குடும்பங்களின் காணிகள் பகுதிகளவில் விடுவிக்கப்பட்டு உள்ளது. ஏனைய 10 குடும்பங்களின் காணிகள் முற்றாக விடுவிக்கபப்டவில்லை.
இதனால் பிலகுடியிருப்பு மக்கள் மீளவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். பிலகுடியிருப்பு மக்களிடம் முழுமையாக காணிகளை கையளித்தாலே தாம் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.