168
தமிழகத்தில் 5 பெண்களில் ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் யுனிசெப் அமைப்பின் தலைமை செயலதிகாரி ஜாப் ஜேகரியா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் பருவத்தினர் வேலைகளுக்குச் செல்வதாகவும் 10 முதல் 19 வயதுடைய பெண்களில் 45 சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love