இலங்கை

உள்நாட்டு விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை – ஜனாதிபதி


உள்நாட்டு விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளுக்கு எவ்வித இடமும் அளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமையை பாதுகாத்துக் கொள்ள தாம் தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ள அவர்  தாய் நாட்டுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply