211
பல்மைரா நகரம் முழுவதும் மீட்கப்பட்டுள்ளதாக சிரியா அறிவித்துள்ளது. சிரியாவின் பாரம்பரியம் மிக்க பல்மைரா நகரை கடந்த 2015-ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியதுடன் அங்கு இருந்த பழமையான பாரம்பரியம் மிக்க புராதன சின்னங்களையும் அழித்தனர். அவர்களை அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற்ற சிரியா ராணுவம் மீண்டும் ரஸ்ய விமானப்படையின் ஆதரவுடன் தாக்குதல்களை மேற்கொண்டது.
இந்தநிலையில் பல்மைரா நகரை விட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று முற்றிலுமாக வெளியேறி விட்ட நிலையில் பல்மைரா நகரம் முழுவதும் மீட்கப்பட்டுவிட்டதாக சிரியா அறிவித்துள்ளது. அதை ரஷியாவும் உறுதி செய்துள்ளது.
Spread the love