ஆளுனருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண ஆளுனர் அமரா பியசீலி ரட்நாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் இன்றைய தினம் மாகாணசபையில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிப்பதனை ஒத்தி வைக்குமாறு மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசாநாயக்க, அவைத் தலைவரிடம் கோரியுள்ளார். ஆளுனர் தொடர்பான பிரச்சினைக்கு தாம் நாடு திரும்பியதும் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தோனேசியாவிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி அறிவித்துள்ளதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை மேற்கொள்ளும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வட மேல் மாகாண ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
Mar 7, 2017 @ 07:52
வட மேல் மாகாண ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. வட மேல் மாகாண ஆளுனராக கடமையாற்றி வருகின்ற அமரா பியசீலி ரட்நாயக்க மீது இன்றைய தினம் நடைபெறவுள்ள மாகாணசபை கூட்டத்தின் போது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மாகாண ஆளுனர் பியசீலி ரட்நாயக்க, வேண்டுமேன்றே அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.