புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்படுவது நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு கூட்டு விசாரணைக்குழுவொன்று நிறுவப்பட வேண்டுமென கொழும்பு தேசிய நூலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
முப்படையினரின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் தேவை ஏற்பட்டால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரையும் நியமித்து இந்த விசேட கூட்டு விசாரணைக் குழு நிறுவப்பட வேண்டுமெனவும் இவ்வாறு நடத்தப்படும் விசாரணைகள் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.