191
தாம் பொய்யுரைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவில் இன்றைய தினம் பந்துல குணவர்தன சாட்சியமளித்திருந்தார். ஆணைக்குழுவிற்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஊடகங்களில் வெளியிட்ட தகவல் பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாட்சியமளித்த சந்தர்ப்பத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவரிடம் ஊடகங்களுக்கு பொலியான தகவல்களை வழங்க வேண்டாம் என ஆணைக்குழுவின் அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
Spread the love