இந்தியா

தனியார் நிறுவங்களில் வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் ஆறு மாதம் விடுமுறை – மசோதா நிறைவேற்றம்


இந்திய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனியார் நிறுவங்களில் வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆறு மாதகாலம் விடுமுறை   வழங்கும்  மசோதா நிறைவேற்றபப்ட்டுள்ளது.

அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் அல்லது ஆறு மாதம் பேறுகால விடுமுறை உள்ள நிலையில் பெரும்பான்மையான தனியார் நிறுவனங்கள் 3 மாதங்கள் மட்டுமே இவ்விமுறையை வழங்குகின்றன.

இந்நிலையில் தனியார் நிறுவங்களில் பணிபுரியும் பெண்களும் பயனுறும் வகையில் 6 மாத பேறு கால விடுமுறை  அவர்களுக்கும் உண்டு என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.  இந்தநிலையில்  நேற்றையதினம் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்  இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டபின்  தனியார் நிறுவனக்களில் பணிபுரியும் பெண்களும் ஆறு மாதங்கள் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறையை பெறாலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply