உலகம்

துருக்கி பிரதித் தூதுவர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளார்


சுவிட்சர்லாந்திற்கான துருக்கியின் பிரதித் தூதுவர் புகலிடம் கோரியுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. வோல்கன் கரகோஷ் ( Volkan Karagoz )சுவிட்சர்லாந்துக்கான துருக்கியின் பிரதித் தூதுவராக கடமையாற்றி வருகின்றார். பிரதித் தூதுவர் உள்ளிட்ட பலர் இவ்வாறு புகலிடம் கோரியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலர் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.  துருக்கியின் பிரதித்தூதுவர்  வோல்கன்  கடந்த மாதம் நாடு திரும்புமாறு அழைக்கப்பட்டிருந்தார் எனினும் அவர்; நாடு திரும்பாது குடும்பத்துடன் புகலிடம் கோரியுள்ளார். புகலிடம் வழங்குவது குறித்து இன்னமும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply