சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானதை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட முறையீடு தொடர்பில் அவரது சட்டத்தரணிகள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லுபடியற்றது எனவும் அ.தி.மு.க வில் 5 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருப்பவரை மட்டுமே பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடியும் என கட்சி விதியில் கூறப்பட்டிருப்பதாக ஓ.பி.எஸ். அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தமைக்கமைய அயிக்கப்பட்டுள்ள பதிலில் தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது சரியானது எனவும் தான் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
மேலும் தற்போது தனக்கு எதிராக முறைப்பாடு கொடுத்தவர்களும் தன்னை தேர்வு செய்ய முன்மொழிந்தவர்கள் என்பதை தேர்தல் ஆணையகம் ; கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சசிகலாவின் பதில் மனுவை அரசியல் கட்சிகளின் பொதுவான விதி அடிப்படையிலும், அ.தி.மு.கவின் கட்சி விதி அடிப்படையிலும் இரு விதமாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.