விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான துடுப்பாட்டக்காரர்களின் தரவரிசையி் ல் வில்லியர்ஸ் மீண்டும் முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான துடுப்பாட்டக்காரர்களின் தரவரிசையி்ல் தென்ஆப்பிரிக்கா அணியின் தலைவர்  டி வில்லியர்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியின்  சிறப்பான துடுப்பாட்டக்காரரான  டி வில்லியர்ஸ்  கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து முதல் ஐந்து இடத்திற்குள்ளேயே இருந்து வருகின்றார்.

காயம் காரணமாக  சில காலம் விளையாடாமல் இருந்த  டி வில்லியர்ஸ்  தற்போது தென்ஆப்பிரிக்கா மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்   262 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இதனால் இன்று வெளியிடப்பட்ட தரவரிசையில் 875 புள்ளிகளுடன் டி வில்லியர்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். 871 புள்ளிகளுடன்  வார்னர் 2-வது இடத்திலும் விராட் கோலி 3-வது இடத்திலும் உள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap