உலகம்

அலெப்போவுக்கு நீர் விநியோகிக்கும் முக்கிய நிலையம் சிரிய ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


சிரியாவின் அலெப்போவுக்கு நீர் விநியோகிக்கும் முக்கிய  நிலையம் ஒன்று சிரிய ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  குறித்த தகவலை சிரிய ராணுவம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளதோடு, இது தொடர்பான காணொளி ஒன்றையும்  வெளியிட்;டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அலெப்போவின் நீர் விநியோகம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததோடு அங்கு பொதுமக்கள் கிணற்று நீரினையே உபயோகித்து வந்ததுடன் சிலர் தனியார் விற்பனையாளர்களிடம் பணம் செலுத்தியும் நீரினை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிரிய மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் கிழக்கு அலெப்போவில் உள்ள கிராமங்கள் மீது மேற்கொண்ட தொடர் விமான தாக்குதல்கள் மூலம், கிழக்கு அலெப்போவின் பெரும்பாலான பகுதிகள் தற்போது சிரிய படையினர் வசம்  வந்தடைந்துள்ளதாக  சிரிய மனித உரிமைகள்  கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply