யுத்தக் குற்றங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்று சர்வதேச அழுத்தங்களுக்கு அரசு அடிபணிந்திருக்கத் தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களும், தமிழர் சார்ந்த சர்வதேச அமைப்புக்களும் இன்று அரசிற்கு பல்வேறு நெருக்குதல்களைக் கொடுத்து வருகின்றன எனத் தெரிவித்த அவர் யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் வடக்கு கிழக்கில் இராணுவத்தினை மட்டும் பலப்படுத்தாது பாதிக்கப்பட்ட மக்களையும் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் மட்டுமன்றி முன்னைய அரசாங்கமும் பொறுப்புக்கூறவேண்டும் எனவும் தற்போது மக்கள் இந்த அரசாங்கங்களில் நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களது நியாயங்கள் செவிமடுக்கப்பட்டு அதற்கமைவாக அவர்களுக்கான அதிகாரங்களும் பொறுப்புக்களும் பகிர்ந்தளிக்கப்பட்டால் மாத்திரமே நாட்டில் அமைதி நிலவும் எனவும் அதற்காக நல்லிணக்கச் செயற்பாடுகள் வேறுகோணங்களில் முன்னெடுக்கப்பட்டு அவை துரிதமாகவும் மேற்கொள்ளப்படுவதே நாட்டின் பாதுகாப்பிற்கும் ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.