145
உணவு பற்றாக்குறை காரணமாக சுமார் 1.4 மில்லியன் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது. 1945 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது பாரிய மனிதாபிமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 20 மில்லியன் மக்கள் தற்போது உயிரச்சுறுத்தலை எதிர்நோக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் ஏமன், சோமாலியா, தென் சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இந்த அபாய நிலையிலிருந்து மனித உயிர்களை காப்பாற்ற ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
Spread the love