192
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசீமிற்குசு வீசா வழங்குவதற்கு கட்டார் தூதரகம் காலம் தாமதம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கட்டாரின் நிதி அமைச்சரது அழைப்பினை ஏற்றுக்கொண்டு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு கட்டாருக்கு செல்ல அமைச்சர் ஹாசீம் திட்டமிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள இந்த பயணம் வழியமைக்கும் என கருதப்படுகின்ற நிலையில் அமைச்சருக்கு ஏன் தூதரகம் வீசா வழங்க காலம் தாழ்த்தி வருகின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Spread the love