விளையாட்டு

பங்களாதேஷ் அணி நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது


பங்களாதேஷ் அணி நூறாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாட உள்ளது. இலங்கை அணிக்கு எதிராக இன்றைய தினம் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி பங்களாதேஷ் அணியின் நூறாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இன்று காலை ரங்கன ஹேரத் தலைமையில் இலங்கை அணியும், முஷ்பிகர் ரஹிம் தலைமையில் பங்களாதேஷ் அணியும் களமிறங்க உள்ளன. நேற்றைய பயிற்சியின்போது பங்களாதேஷ் அணியின் விக்கட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான லிட்டன் தாஸ் காயமடைந்துள்ளதன் காரணமாக அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பங்களாதேஸ் அணி நுறாவது போட்டியில் வெற்றிக்காக தீவிர முயற்சியை மேற்கொள்ளும் என்று, அணியின்  பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.  இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல்  போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply