சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. மிதக்கும் ஆயுதக் கப்பல் ஒன்றை நடத்திச் சென்று அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் நிசாங்க சேனாதிபதி உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்வது குறித்து சட்ட பிரச்சினைகள் காணப்படுவதாக பிரதிவாதிகள் தரப்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாதங்களுக்கு செவிமடுத்த நீதவான் வழக்கினை எதிர்வரும் மே மாதம் 29ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.