சட்டத்தின் மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் முகாமைத்துவத்தை விடவும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு உணவு, பானங்கள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான ஏனைய நுகர்வுப் பண்டங்களை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உணவு பானங்கள் உள்ளிட்ட ஏனைய நுகர்வு பண்டங்களின் தரம் நாட்டு அபிவிருத்தியின் முக்கிய அளவுகோலாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி கொழும்பு தொடக்கம் நாடு முழுவதுமுள்ள உணவக சமையலறைகளில் அந்த தரம் மற்றும் தூய்மையை காண முடியாதெனவும் தெரிவித்தார்.
சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (15); கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.