Home இலங்கைகடற் கொள்ளையர்களிடமிருந்து இலங்கையர்களை பாதுகாக்கத் தயார் – நிசாங்க சேனாதிபதி

கடற் கொள்ளையர்களிடமிருந்து இலங்கையர்களை பாதுகாக்கத் தயார் – நிசாங்க சேனாதிபதி

by admin


கடற் கொள்ளையர்களிடமிருந்து இலங்கையர்களை பாதுகாக்கத் தயார் என அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார். அண்மையில் சோமாலிய கடற்படையினரால் கடத்தப்பட்டுள்ள இலங்கைப் பணியாளர்களை விடுவிக்க உதவுமாறு சட்ட ரீதியாக கோரினால், உதவத் தயார் என அவர்  தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தமது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டுக்காக குரல் கொடுக்கத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன எனவும் இந்த நடவடிக்கைகளின் இரகசியத் தன்மை காரணமாக அவை பற்றிய விபரங்களை வெளியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More