விளையாட்டு

விராட் கொஹ்லி உபாதையினால் பாதிப்பு


இந்திய அணியின் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கொஹ்லி உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய நாள் ஆட்டத்தின் போது களதடுப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் உபாதைக்குள்ளாகியிருந்தார்.

உபாதை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறிய கொஹ்லி அதன் பின்னர் மைதானம் திரும்பவில்லை. எவ்வாறெனினும் கொஹ்லிக்கு பாரிய பாதிப்புக்கள் கிடையாது என இந்திய கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply