171
போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்த தனியான இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. சட்டம் ஒழுங்கு அமைச்சு இவ்வாறு போராட்டங்களை நடத்தக்கூடிய இடங்களை அடையாளம் காணும் பணிகளை பூர்த்தி செய்துள்ளது. இந்த இடங்கள் போராட்டங்களை நடத்த நிரந்தரமாக ஒதுக்கப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய இந்த இடம் ஒதுக்கப்பட உள்ளதாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எவ்வாறெனினும், எந்த இடத்தில் போராட்டங்களை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Spread the love