உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் அதிகளவான வழக்குகள் தீர்க்கப்படாது குவிந்து கிடப்பதாகவும் இதற்கு தீர்வு வழங்கும் நோக்கில் நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக நீதிமன்ற மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 15 ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக உயர்த்தவும், புதிதாக 30 நீதிமன்றங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.