நிதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் பிரதான மாற்றங்களாக நிதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெகு விரையில் ஜனாதிபதி அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டிருந்தார் எனவும், பிரதமரின் எதிர்ப்பு காரணமாக அமைச்சரவையில் மாற்றம் செய்பய்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிதி, பெருந்தெருக்கள், மீன்பிடித்துறை உள்ளிட்ட சில அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.