189
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ரஸ்யாவிற்கு செல்லவுள்ளார். ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பிற்கு அமைய, ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார். நாளை முதல் 24ம் திகதி வரையில் ரஸ்யாவில் ஜனாதிபதி தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரம், சுற்றுலாத்துறை, பொருளாதாரம் போன்ற விடயங்களில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன. அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ஜோன் அமரதுங்க மற்றும் எஸ்.பி.நவின்ன உள்ளிட்டவர்களும் ஜனாதிபதியுடன் இந்த பயணத்தில்; இணைந்து கொள்ள உள்ளனர்.
Spread the love