Home இலங்கையாழ் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 முக்கிய நபர்கள் கொட்டாஞ்சேனையில் கைது

யாழ் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 முக்கிய நபர்கள் கொட்டாஞ்சேனையில் கைது

by admin

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனஞ்சயன் ,  பாரத் மற்றும விக்ரம் என்ற மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த மூன்று பிரதான நபர்களும் தப்பிச் சென்று   கொட்டாஞ்சேனைப் பகுதியில்  உள்ள வீடொன்றில் மறைந்து வாழ்ந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகள் குறித்த  தகவல்கள் இரகசியமாக பேணப்பட்ட நிலையில் குறித்த மூவரும் காவல்துறையினரின்  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு இன்று சனிக்கிழமை அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களை யாழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடிவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More