சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையானது முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரன தலைமையிலான குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உபாலி தென்னக்கோன், கீத் நொயார் உட்பட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களிலும் துன்புறுத்தல்களிலும் மேற்படி குழு தொடர்புபட்டிருப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கபில ஹெந்தவிதாரனவின் கீழ் இயங்கிய இந்த விசேட குழுவானது ஐந்து சிம் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளதாகவும் ஊடகவியலாளர்களின் தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய அனைத்து உரையாடல்களுக்கும் இந்த சிம் அட்டைகளையே பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.