Home இலங்கைகிண்ணியாவில் அதிகரித்துவரும் டெங்கு நோய் மரணங்கள் குறித்து திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஆராய்வு

கிண்ணியாவில் அதிகரித்துவரும் டெங்கு நோய் மரணங்கள் குறித்து திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஆராய்வு

by admin


திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா சம்மந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்றூப் ஆகியோருடன்  கிழக்கு மாகாண முப்டைகளின் தளபதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்

குறித்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தின்  கிண்ணியாவில் பரவி வரும் டெங்கு நோயும் அதிகரித்துவரும்  மரணங்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு அங்கு நடைமுறைப் படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆரயப்பட்டு பல தீர்வுகளும் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்டையில்  விரைவாக இன்றிலிருந்தே நுளம்புகளைக் கட்டுப்படுத்த புகை விசுறும் கருவிகளை இயக்க பயிற்றப்பட்டவர்களை  நியமிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டதுடன் கழிவுகளை அகற்ற முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின்  பணிப்பில் 10 வைத்தியர்கள் மற்றும் கழிவகற்றும் பவுசர்களும்  அத்துடன் தேவையான ஏனையவற்றையும் இன்றிலிருந்து பாவனைக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More