ஐ.சீ.சீ என்றழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இணைந்து கொள்ளப் போவதில்லை என பிரதமர் அறிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தில் இலங்கை இதுவரையில் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கால மாறு நீதிப்பொறிமுறையின் போது கலப்பு நீதிமன்ற நிபந்தனையை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என பிரதமர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் சற்று முன்னர் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நீதவான்களின் பங்களிப்புடன் இலங்கை விசாரணைப் பொறிமுறைமை அமைய வேண்டுமெனவும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் பக்கச்சார்பற்ற வகையில் அமைய வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.