பவானி ஆற்றில் தடுப்பணை கட்டி வரும் கேரள அரசுக்கு இன்று உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேல்பவானியில் உற்பத்தியாகும் பவானி ஆறானது, கேரள எல்லையில் 24 கி.மீ. தூரம் பயணிக்கின்றது. இதன் 6 இடங்களில் 4 கி.மீ. தூரத்துக்கு தடுப்பணைகளை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
பவானி ஆற்று நீர்தான் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் ஆதாரம் உள்ளதுடன் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. கேரள அரசு தடுப்பணைக் கட்டினால் தங்களது குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு கடும் பஞ்சம் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கானது இன்று விசாரணை வந்தது.
இதன்போது நீதிபதிகள்; கேரளாவின் புதிய அணை உள்ளிட்டவை குறித்து 15 நாளில் தமிழகத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு கேரளா அணை கட்டுவதற்கு தடை விதித்துள்ளனர்.