165
கடந்த கால பிணை முறி கொடுக்கல் வாங்கல்களை சட்ட ரீதியாக்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக அனைத்து பிணை முறி விற்பனைகளையும் சட்ட ரீதியாக்கும் வகையில் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது குறித்து பாராளுமன்றில் அறிவித்துள்ளார். புதிய சட்டமொன்றின் மூலம் பிணை முறி விற்பனைகளை சட்ட ரீதியானது என அறிவிக்காவிட்டால் அதனை கொள்வனவு செய்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love